சபரிமலையில் 3 முறை தெரிந்த மகர ஜோதி : லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசம்

 

பரிமலை

ன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் மும்முறை மகர ஜோதி தெரிந்ததில் பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர்.

மகரஜோதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.   இன்று மாலை சபரிமலை ஸ்ரீ ஐயப்பனின் ஆபரணப் பெட்டி சபரிமலைக்கு வந்தது.    அதையொட்டி ஐயப்பனுக்கு ஆபரணம் அணிவிக்கப்பட்டு விசேஷ தீபாராதனை நடைபெற்றது.

இன்று மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு நேற்று இரவு முதல் நடை சாத்தப்படாமல் தொடர்ந்து தரிசனம் நடந்தது.   விசேஷ தீபாராதனை முடிந்த பிறகு பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரிந்தது.   பக்தர்களின் சரண கோஷத்துக்கு இடையில் மகர ஜோதி மூன்று முறை தெரிந்தது.

இதனை சபரிமலைக்கு வந்துள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்து பரவசம் அடைந்தனர்.   சாமி ஐயப்பன் ஆபரணம் அணிந்த  கோலத்துடன் மூன்று நாட்கள் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்க உள்ளார்.

கார்ட்டூன் கேலரி