ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி

சிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் லக்சாய் ஷியோரன் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் காரணமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் 2வது வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

எற்கனவே தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதங்களை பெற்றுள்ள இந்தியா  தற்போது 4வது பதக்கத்தை பெற்றுள்ளது.

ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதலில் டிரப் (Trap) பிரிவில் இந்தியாவின் இளம் வீரரான லக்சாய் ஷியோரன் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில்,  இறுதிப் போட்டியில் சீன தைபே வீரருக்கும், இவருக்கும் இடையே  போட்டி மிகக்கடுமையாக இருந்தது.

இறுதியில் சீன தைபே வீரர் யங் குன்பி 48 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இந்திய வீரர் லக்சாய் 43 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். கொரியா வீரர் 30 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.

ஏற்ககனவே இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள்  ஆடவர் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் தீபக் குமார் வெள்ளிப் பதக்கம்  வென்ற நிலையில், தற்போது 2வது வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.