’லஷ்மன் ஸ்ருதி’ உரிமையாளர் ராமன் தூக்கிட்டு தற்கொலை….!

சென்னையில் திருவையாறு’ என்ற மார்கழி மாத இசை பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக லஷ்மன் ஸ்ருதி நடத்தி வருகின்றது.இதன் உரிமையாளர்களான இரட்டையர் சகோதரர்கள் ராமன் – லஷ்மன்.

லஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர்களில் ஒருவரான ராமன், நேற்று சென்னை அசோக் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது இந்த திடீர் மரணம் தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது போலீசார் அவரது தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதுவரை தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.