ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த ‘காஞ்சனா’ இந்தி ரீமேக்கான ‘லட்சுமி பாம்’ படத்தில் அக்‌ஷய் குமாரின் திருநங்கை லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ராகவா லாரன்ஸ் இயக்கி வருகிறார்.

‘காஞ்சனா’ படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார் சரத்குமார்.

அடுத்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.