‘கும்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் லக்ஷ்மி மேனன்.
மேலும் நடிகையாக மட்டுமல்லாமல் டி.இமான் இசையில் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தில் அவர் பாடிய ‘குக்குறு’ பாடல் மூலம் பாடகியாகவும் கலக்கி வருகிறார்.
https://www.instagram.com/p/CA5lgThDlu_/
இந்நிலையில் நடிகை லக்ஷ்மி மேனன் டான்ஸ் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் லக்ஷ்மி மேனன் திடீரென தவறி விழுகிறார். தரையில் தண்ணீர் இருந்ததை கவனிக்காததால் அவர் தவறி விழுந்ததாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.