லட்சுமி பார்வதி மீது செக்ஸ் புகார் – அதிர்ச்சியில் ஆந்திரா…!

--

மறைந்த பழம் பெரும் தெலுங்கு நடிகரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் இரண்டாவது மனைவியான லட்சுமி பார்வதி மீது நடிகரும், சமூக சேவகருமான கோட்டி என்ற ஆனந்த் பால் வினுகொண்டா போலீஸ் நிலையத்தில் செக்ஸ் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், “எனக்கு லட்சுமி பார்வதியை கடந்த 4 ஆண்டுகளாக தெரியும். கடந்த 18 மாதங்களாக அவர் என்னை காதலிப்பதாக ‘வாட்ஸ் அப்’ மூலம் தகவல்கள் அனுப்பி வருகிறார். மேலும் ஆபாச படங்களுக்கான இணையதள தொடர்புகளையும், படங்களையும் அனுப்பி வருகிறார். பாலியல் தொல்லையும் கொடுத்து வருகிறார்.

அவரது விருப்பத்துக்கு நான் அடிபணியாததால், அவர் என்மீது கோபம் கொண்டுள்ளார். நான் பயங்கர விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என மிரட்டுகிறார்.

எனக்கும், என் குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும். பாலியல் தொல்லை செய்ததற்காக லட்சுமி பார்வதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சுமி பார்வதி அனுப்பியதாக, சில ஆபாச படங்களையும், செல்போன் ஸ்க்ரீன் ஷாட்களையும் அவர் போலீசாரிடம் ஒப்படைத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆந்திராவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், லட்சுமி பார்வதி மீது நடிகர் ஒருவர் கூறியிருக்கும் செக்ஸ் புகாரால், தெலுங்கு சினிமாத் துறையிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.