டெல்லி: லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.

லட்சுமி விலாஸ் வங்கி சில மாதங்களாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. 2020ம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் ரூ.397 கோடி வருவாய் இழப்பை சந்தித்தது.

இதையடுத்து நஷ்டத்தை தடுக்கும் விதமாக லட்சுமி விலாஸ் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை தொடர்ந்து வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.

இந் நிலையில் ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன் படி, லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை என்று கூறி உள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், லட்சுமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பயப்பட வேண்டாம். அவர்களின் பணத்தை திருப்பி தரும் அளவுக்கு வங்கியில் பணம் உள்ளது என்று தெரிவித்துள்ளது.