வனிதாவிடம் ஒன்றேகால் கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை நோட்டீஸ்..

டிவி டெக்னீஷியன் பீட்டர் பாலை நடிகை வனிதா 3வதாக திருமணம் செய்தார். பீட்டர் முதல் மனைவி இருக்கும்போது அவர் சம்மதம் இல்லாமல் வனிதவை மணந்தார். இது சர்ச்சையானது,


நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதா பீட்டர்பால் திருமணம் பற்றி விமர்சனம் செய்தார். இதையடுத்து வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனுகு மோதல் ஏற்பட்டது. லட்சுமி ராமகிருஷ் ணனை வனிதா ஒருமையில் பேசி அவதூறாக பேசினார். இந்நிலையில் வனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டிஸ் அனுப்பினார். அதில் தன்னை தர குறை வாக பேசி அவமானப் படுத்திய வனிதா ஒன்றேகால் கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் வனிதா நிபந்தனை யற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறி உள்ளார்.
நடிகை மற்றும் பிக் பாஸ் புகழ் வனிதா தனது சமூக வலை பக்கத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் அனுப்பிய வக்கீல் நோட்டீஸை பகிர்ந்துகொண்டு, “நல்லமனம் கொண்ட சமூக சேவகி எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி ஒன்றே கால் கோடி நஷ்ட ஈடு மிரட்டுகி றார். என்னுடைய குடும்ப விவா காரத்தில் அவர் தேவையில்லா மல் தலையிட்டு போலியான ஜட்ஜ்போல் செயல்பட்டார். அதற்கான அதிகாரம் அவருக்கு கிடையாது’ என வனிதா தனது இணைய தள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.