கேரளாவை பூர்வீகமாக கொண்ட இந்தியத் திரைப்பட நடிகை லட்சுமி மேனன்.

வணிகரீதியான வெற்றியைத் தேடித்தந்த, சுந்தர பாண்டியன் என்ற படத்தில் நடித்து தமிழ்த் திரைப்படவுலகில் பெயர் பெற்றார்.

சுந்தர பாண்டியன் திரைப்படம் வெளிவரும் முன்னரே கும்கி திரைப்படம் வெளியானதால் இவர் கும்கி திரைப்படம் மூலமே பிரபலமானார்.

கடைசியாக நடிகை லட்சுமி மேனன் நடிப்பில், விஜய் சேதுபதியுடன் நடித்த ‘றெக்கை’ படம் தான் வெளியானது.

பட வாய்ப்புகள் இல்லாததால், படிப்பிலும், நடன வகுப்பு எடுப்பதிலும் கவனம் செலுத்தி வந்தார் லட்சுமி மேனன்.

திரையுலகில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகி வரும் லட்சுமி மேனன் தன்னுடைய உடல் எடையை குறைத்து செம்ம பிட்டாக மாறியுள்ளார்.

தன்னுடைய நியூ மிரட்டல் லுக்கில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.