துருவ் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு செவன் ஸ்கிரீன் நிறுவனம் வெளியிட்ட பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்….!

--

தற்போது கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வரும் சியான் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சியான் 60 படத்தில் இணையவுள்ளார்.

சியான் விக்ரமுடன் முதல் முறையாக துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கவுள்ளார்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது.

இந்நிலையில் துருவ் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு செவன் ஸ்கிரீன் நிறுவனம் பிறந்தநாள் வாழ்த்துகூறி போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் துருவ் ரசிகர்கள்.