மும்பை மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவ் அனுமதி

மும்பை

டல் நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள ஏசியன் ஹைர்ட் மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 90 களில் பீகார் முதல்வராக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்து வந்தார்.    அப்போது நடந்த கால்நடை தீவன ஊழல் குறித்து 4 வழக்குகள் பதியப்பட்டன.   அந்த வழக்குகளில் லாலு குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.   அங்கு அவருக்கு உடல்நலக் குறைவு உண்டானது..

அதை ஒட்டி மும்பை மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்ற லாலு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.   அவர் தமது இல்லத்தில் தங்கி சிகிச்சை பெறக் கோரி ஜாமீன் மனு செய்தார்.   அதை ஒட்டி அவருக்கு  அளிக்கப்பட்ட ஜாமின் ஆகஸ்ட் 14 வரை நீட்டிக்கப்பட்டது.  அதன் பிறகு ஆகஸ்ட் 20 வரையிலும் அதற்கும் பிறகு ஆகஸ்ட் 27 வரையும் ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று லாலு பிரசாத் யாதவ் மகனும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர்களில் ஒருவருமான தேஜஸ்வி யாதவ் டிவிட்டரில், “எனது தந்தை உடல் நலக்குறைவால் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக மும்பையில் உள்ள ஏசியன் ஹைர்ட் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  மருத்துவர்கள் அவருக்கு தீவிர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.   அவர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என பதிந்துள்ளார்.