ராஞ்சி: ஆர்ஜேடி தலைவா் லாலு பிரசாத் யாதவுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

பீகாரில் 1992-93ம் ஆண்டில் லாலு பிரசாத் யாதவ் முதலமைச்சராக இருந்த போது சாய்பாஸா கருவூலத்தில் இருந்து ரூ. 33.67 கோடி முறைகேடாக எடுக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி, லாலு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சிபிஐ வசம் உள்ளது,
இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் லாலுக்கு ஜாமீன் வழங்கி ஜார்க்கண்ட் உயர்நீதி மன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக லாலு பிரசாத் யாதவ் தற்போது ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கால்நடை தீவன முறைகேடு தொடா்பாக சாய்பாஸா கருவூல வழக்கு உள்பட 3 வழக்குகளில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். தும்கா கருவூல வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால் லாலு சிறையில்தான் இருப்பார் என்று கூறப்படுகிறது.