லாலு பிரசாத் மகனின் பலகோடி மதிப்பிலான சொத்து முடக்கம் : வருமான வரித்துறை நடவடிக்கை

பீகார் :

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைக்கு சென்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் லாலுபிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவுக்கு சொந்தமான 7,105 சதுர அடி நிலம் சொத்தை வருமான வரித்துறை முடக்கி உள்ளது. முடக்கப்பட்டுள்ளது.

பாட்னா அருகே ஷேக்பூராவில் உள்ள தேஜஸ்வியின் தொழிற்சாலை  நிலத்தை பினாமி சட்டத்தின் கீழ் அதிகாரிகள் கையகப்படுத்தி உள்ளனர்.

முன்னாள் ரெயில்வே அமைச்சரும், பீகார் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். அவர்மீது மேலும் பல ஊழல் வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், பாட்னாவில் உள்ள  லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது வருமானத்துக்கு அதிகமாக ஏராளமான சொத்துக்களை சேர்க்கப்பட்டது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து லாலுவின் மகள், மிசாபாரதியிள் ரூ.100 கோடி மதிப்பிலான டில்லியில் உள்ள பிரமாண்ட பங்காள முடக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தற்போது, லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவுக்கு சொந்தமான நிலம் பாட்னா அருகே ஷேக்புராவில் உள்ளது. இந்த நிலத்தில் தொழிற்சாலை கட்ட தேஜஸ்வி யாதவ் முயற்சி மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் பல கோடி மதிப்பிலான அந்த நிலத்தை வருமான வரித்துறையினர்  பினாமி சட்டத்தின் கீழ் முடக்கி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.