பாட்னா,

 லாலு பிரசாத் பீகார் முதல் அமைச்சராக இருந்த போது கால்நடைத் தீவனம் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

லாலு பிரசாத் பீகார் மாநில முதல்வராக இருந்தபோது, மாவட்டு தீவனம் வாங்க ரூ.84 கோடி ரூபாய் அரசு கருவூலத்தில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஏற்கனவே விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட உள்ளது.

இன்று ராஞ்சி நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், மகன் தேஜஸ்வியுடன் லாலு ராஞ்சிக்கு விரைந்துள்ளார்.

நாடு முழுவதும் எதிர்நோக்கி உள்ள இந்த தீர்ப்பில், குற்றச்சாட்டு உறுதிபடுத்தப் பட்டால் லால்லு சிறைக்கு செல்ல நேரிடும் என்பதால் பீகாரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

சமீபத்தில் 2ஜி வழக்கு குறித்து கருத்து தெரிவித்த லாலு, 2ஜி, ஆதர்ஷ் போன்ற வழக்குகளில் நீதி கிடைத்ததுபோல தனது வழக்கிலும் நீதி கிடைக்கும் என்றும், தான் விடுவிக்கப்படுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்