நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்தம்: தமிழகம் உள்பட பல மாநிலங்களுக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்

டில்லி :

நிலம் கையகப்படுத்தல் சட்டம் 2013 ம்ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்தியஅரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தில் பாஜக அரசு  திருத்தம் கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  தொடரப்பட்ட வழக்கில், தமிழகம் உள்பட பல மாநிலங்களுக்கு விளக்கம் கோரி உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலம் கையப்படுத்துதல் தொடர்பாக  பாஜக அரசு திருத்தம் மேற்கொண்டது. இதை எதிர்த்து,  சமூக ஆர்வலர் மேதா பட்கர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை சாரித்த நீதிபதிகள், ஜார்கண்ட், தமிழகம், குஜராத், ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

2013ம் ஆண்டு அபோபதைய காங்கிரஸ் தலைமையிலான அரசு  நாடாளுமன்றத்தில்  ஏற்கனவே நடைமுறையில் இருந்த நில எடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக, ‘நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மறு வாழ்வு அளிப்பு மற்றும் மறு குடியமர்வுக்கான உரிமை’ என்னும் சட்ட முன்வடிவினை கொண்டு வந்து அதனை சட்டமாக்கியது.  இந்தச் சட்டம் 1.1.2014 ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப் பட்டது.

ஆனால், அதன்பிறகு ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, இந்த சட்டத்தில்9  திருத்தங்கள் கொண்டு வந்தது.  இந்த சட்டத்தில் அதிமுகவின் கோரிக்கையும் ஏற்கப்பட்டது. அதன் காரணமாக சட்ட திருத்த மசோதாவிற்கு மக்களவையில் அஇஅதிமுக ஆதரவளித்து வாக்களித்து சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், இந்த சட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதி மன்றம் தமிழகம், குஜராத் உள்பட பல மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியுள்ளது.