சென்னை-சித்தூர் பசுமை வழிச்சாலை: நிலம் கையகப்படுத்தல் துவங்க இருக்கிறது

--

சென்னை சித்தூர் இடையே அமையவிருக்கும் பசுமைவழிச்சாலைக்காக 850 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தும் பணி துவங்க இருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து சார்பில் சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை அமைக்கப் பட்டுவருகிறது. விவசாயிகள், பொது மக்கள் மத்தியில் இந்த சாலைக்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்டு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனஆலும்  தேசிய நெடுஞ்சாலைத்துறை பசுமை வழிச் சாலை அமைப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.

 

 

 

இந்த நிலையில் சென்னை – சித்தூருக்கு இடையே ரூ. 3,200 கோடி செலவில் பசுமை வழிச் சாலை அமைக்க திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.  126 கிலோ மீட்டர் தூரத் துக்கு இந்த சாலை அமைக்கப்பட இருக்கிறது.  தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் 43 கிலோ மீட்டரும், ஆந்திர மாநிலம் சித்தூரில் 83 கிலோ மீட்டர் நீளத்திலும் அமைக்கப்படுகிறது.

இதற்காக புலிக்குன்றத்தில் 32 ஹெக் டேர் வனப்பகுதி நிலம் அழிக்கப்படுகிறது. மேலும், சாலை யோரம் உள்ள பகுதியில் 886 ஹெக்டேர் நிலம் கையகப் படுத்தப்பட இருக்கிறது.

64 சதவீதம் விவசாய நிலம், 15 சதவீதம் தரிசு நிலம், 10 சதவீதம் வனப் பகுதி நிலம் வழியாக இந்த பசுமை வழிச்சாலை அமைக்கப் படுகிறது.

மத்திய-மாநில அரசு களின் அனுமதியின் பேரில் இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தபட இருக்கிறது.

இந்த சாலைக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணி துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.