நில ஆவணங்களுடன் ஆதார் எண் இணைப்பு கடிதம் போலியானது! மத்தியஅரசு

--

டில்லி,

நில ஆவணங்களுடன் ஆதார் எண் இணைக்க மத்தியஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக வந்த தகவல் பொய்யானது என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

ஏற்கனவே மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதில் இருந்து, அனைத்துவிதமான நடைமுறை களுக்கும் ஆதார் எண் அவசியம் என்று செயல்படுத்தி வருகிறது.

ஆரம்பத்தில் பண வரித்தனைக்கு மட்டுமே என்று கூறிய மத்தியஅரசு, தொடர்ந்து கேஸ் இணைப்பு, வங்கி இணைப்பு, வருமான வரி கட்டுபவர்கள் பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு, மொபைல் எண்ணுடன் ஆதார் இணைப்பு என அதிரடி நடவடிகைகைகளை எடுத்துவந்த நிலையில்,

இன்று காலை திடீரென மாநில அரசுகளுக்கு, நில ஆவணங்களை டிஜிட்டல் முறையில், முறைப்படுத்துவதற்காக   நில ஆவணங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும், அதற்கான காலக்கெடு குறித்தும் சுற்றறிக்கை வந்ததாக செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

அதற்கான  மத்தியஅரசின் கடித நகலும் வெளியானது.

இந்நிலையில், வெளியான தகவல் தவறானது என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இது சம்பந்தமாக மத்தியஅரசு அதிகாரி பிராங் நரோன்ஹா கூறியதாவது,

நில ஆவணங்களுடன் ஆதார் இணைப்பது குறித்த  போலி கடிதம் தொடர்பாக  போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும், போலியான இதுபோன்ற கடிதம் எவ்வாறு உருவானது என்பது குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும்  கூறி உள்ளார்.

மேலும் கடிதத்தில் மத்தியஅரசு அதிகாரி கையொப்பமிட்டுள்ளதுபோன்று போலியாக உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் பினாமி சட்டத்தின்படி ஆதார் எண் இணைக்காதவர்களுளின் நிலம் பினாமி நிலமாக கருதப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

1950 ஆம் ஆண்டு முதல் விவசாய நிலங்கள் உட்பட, அசையாச் சொத்துக்கள், இந்த ஆண்டு ஆகஸ்ட் 14 க்கு முன்னர் செய்யப்பட வேண்டிய வீடுகளின் கையொப்பங்கள், மியூச்சுவல் ரெக்கார்ட்ஸ், விற்பனை மற்றும் கொள்முதல் பதிவுகளின் அனைத்து ஆவணங்களும் பதிய செய்ய வேண்டும் என்று  அந்த கடிதத்தில் குறிப்பிடுகின்றன.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கடிதம் போலியானது என மத்திய அரசு அறிவித்து உள்ளது.