சென்னை,

நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் சகோதரர் தேவராஜன், அவரது மனைவி கஜலட்சுமிக்கு நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் சகோதரர் தேவராஜன். இவர்மீது நில மோசடி சம்பந்தமாக விசாரணை நடைபெற்று வருகிறது.  விசாரணைக்கு ஆஜராகாமல் தேவராஜன் குடும்பத்தினர் தலைமறைவாக உள்ளனர்.

இதையடுத்து, எழும்பூர் குற்றவியல் நடுவர் மன்றம் அவர்களை கைது செய்ய பிடி வாரண்ட் ஆணை பிறப்பித்தது.

முன்னாள் தாசில்தார் திருநாவுக்கரசு மற்றும் அவரது உறவினர் வத்சலா ஆகியோருக்கு சொந்தமான, எண்பது கோடி ரூபாய் மதிப்புள்ள  நான்கு ஏக்கர் நிலத்தை முன்னால் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் இளைய சகோதர் தேவராஜன் மோசடியாக தன் பெயருக்கு மாற்று பதிவு செய்து கொண்டர்.

இதுகுறித்து புகார் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. கிரிமினல் செக்சன்  வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் C C B கோர்ட் குற்றசாட்டு பதிவு செய்யப்பட்டது.

விசாரணைக்கு ஆஜராகாமல்  தலைமறைவாக உள்ளதாக போலிசார் அறிக்கை கொடுத்ததை யடுத்து,அவர்களை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

திமுக ஆட்சியின்போது, அதிகார மையத்துக்கு  நெருக்கமாக இருந்த தேவராஜன் 7ஸ்டார் அட்வர்டைசிங் ஏஜென்சி நடத்தி,  சென்னையில் விளம்பர போர்டு வர்த்தகத்தில்  பல ஆண்டுகள் செல்வாக்கோடு கொடிகட்டி பறந்தவர். ஆற்காடு வீராசாமியின் சகோதரர் தேவராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.