ஸ்ரீநகர்:

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து காரணமாக ஜம்மு காஷ்மீர் மாவட்டத்தில் முடக்கி வைக்கப்பட்ட இணையதள சேவைகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. ஏற்கவே ஸ்ரீநகர் உள்பட சில இடங்களில் இணைதள சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில், இன்று ஜம்மு ராம்பன், கிஷ்த்வார் மற்றும் தோடா மாவட்டங்களில் முடக்கி வைக்கப்பட்ட இணைய சேவைகள் இன்று மீண்டும் தொடங்கியது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்பப்பெறப்பட்டதையடுத்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் தொலைபேசி, இணையதள சேவைகள் முடக்கப்பட்டு, 144 தடை உத்தரவும் பிறப் பிக்கப்பட்டது. தற்போது பல இடங்களில் அமைதி நிலவி வரும் நிலையில்,  ஜம்மு, சாம்பா, கத்வா, உதம்பூர், ரியாசி உள்ளிட்ட பகுதிகளில் 2ஜி இணைய சேவை இன்று  மீண்டும் தொடங்கியுள்ளது.

ஜம்மு, ரம்பன், கிஷ்த்வார் மற்றும் தோடா மாவட்டங்களில் இன்று காலை முதலே தொலைபேசி சேவைகள் மற்றும் இணையதள சேவைகள் உயிர்ப்பெற்று உள்ளன. அதுபோல, ராஜோரி மற்றும் பூஞ்சில் உள்ள தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே  ஸ்ரீநகர் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசத்தில் நேற்று முதலே இணைய தள முடக்கம் நீக்கப்பட்டு சேவைகள் தொடர்ந்துள்ள நிலையில், இன்றும் பெரும்பாலான இடங்களில் இணையதள சேவைகள் வழங்கப்பட்டு உள்ளன.

நேற்று முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் தொடங்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிக் கல்லூரிகள் இயக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.