வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம் இந்திய விவசாயத்தின் முக்கியமான நாள்: அமைச்சர் ராஜ்நாத் சிங்

டெல்லி: வேளாண் மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்நாள் உண்மையில் இந்திய விவசாயத்திற்கு ஒரு முக்கியமான நாள் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு குரல்களுக்கு இடையில், வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந் நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து, அமைச்சர் ராஜ்நாத் சிங் டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்நாள் உண்மையில் இந்திய விவசாயத்திற்கு ஒரு முக்கியமான நாள்.

விவசாயத்தின் திறனை வெளிக்கொண்டு வரும் முயற்சிக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாடாளுமன்றத்தில் நிலவிய அமளி கவலை அளிக்கிறது.

வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் இரு அவைகளிலும் நடைபெற்றதில்லை.  அவையில் ஒழுக்கத்தை கடைபிடிப்பது என்பது எதிர்க்கட்சிகளின் கடமை என்று கூறியுள்ளார்.