சீனாவில் நிலச்சரிவு: 100க்கும் மேற்பட்டோர் பேர் பலி?

பீஜிங்,

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 100க்கும் மேற்பட்டோர் பேர் புதைந்திருக்கலாம் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் தற்போது பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலை பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

நேற்று பெய்த கனமழையின் காரணமாக, சீனாவில் சிச்சுவான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் சின்மோ என்னும்  கிராமத்தின் அருகே உள்ள மலையின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது.

இதில் நிலச்சரிவில், அந்த பகுதியில் உள்ள  40 வீடுகள் மண்ணில் புதையுண்டன. இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சாலை மூடப்பட்டுள்ளது.

இந்த இடிபாடுகளில் சுமார் 100க்கும் மேற்பட்டோர்  சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.