சென்னை:

11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும், ஆசிரியர்களுக்கும், மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதுமை ஆசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய கல்வி அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி குழந்தைகளுக்கு நவீன முறையில் கல்வி போதிக்கும் வகையில், ஆசிரியர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், முதல்கட்டமாக, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு லேப்டாப் வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து, அதற்கான உத்தரவை வெளியிட்டு உள்ளது.

அதன்படி, ஆசிரியர்கள்,  புதிய பாடப்புத்தகத்தில் உள்ள QR code-ஐ பயன்படுத்தி கற்பிக்கவும் இணையத்தளத்தை பயன்படுத்தி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

மேலும், கல்வி இயக்குநர், இணை இயக்குநர், இயக்க அலுவலர்கள், 33 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மடிக்கணினி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.