புத்தாண்டு பிறந்த நேரத்தில் பிறந்த குழந்தைகள் – இந்தியா முதலிடம்..!

--

ஜெனிவா: புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பில் முதலிடம் பிடித்துள்ளது இந்தியா.

இதுகுறித்து கூறப்படுவதாவது; இந்த 2020ம் புத்தாண்டு பிறந்த நேரத்தில் உலகம் முழுவதும் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டது யுனிசெப் அமைப்பு.

இந்தப் புத்தாண்டு பிறந்த சமயத்தில், மொத்தம் 392078 குழந்தைகள் பிறந்துள்ளதாக அதன் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. அதாவது, நள்ளிரவு 12 மணிக்கு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை அது.

இதில், இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் அந்த நேரத்தில் 67,385 குழந்தைகள் பிறந்துள்ளனவாம். சீனா 46,299 குழந்தைகள் எண்ணிக்கையுடன் இரண்டாமிடம் பிடித்துள்ளது.

நைஜீரியா 26,039 குழந்தைகள் எண்ணிக்கையுடன் மூன்றாமிடத்திலும், பாகிஸ்தான் 16,787 குழந்தைகள் எண்ணிக்கையுடன் நான்காமிடத்திலும், இந்தோனேஷியா 13,020 குழந்தைகள் என்ற எண்ணிக்கையுடன் ஐந்தாமிடத்திலும் வந்துள்ளன.