இந்தியாவுக்கு அதிக அளவில் எந்த நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள் தெரியுமா?

டில்லி

ந்தியாவுக்கு அதிக அளவில் எந்தெந்த நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர் என்னும் விவரத்தை அரசு அளித்துள்ளது.

இந்தியாவுக்குச் சுற்றுலாப் பயணிகள் வருகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.  அவ்வகையில்  இந்தியாவின் அன்னிய செலாவணி வருவாயும் அதிகரித்து வருகிறது.  இந்த விவரம் குறித்து மக்களவையில்  ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் உறுப்பினர் வங்க கீதா எழுப்பிய கேள்விக்கு இன்று அரசு பதில் அளித்துள்ளது.

அதன்படி இந்தியாவுக்கு அதிக அளவில் வங்கதேசத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.    அதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் இருந்தும் மூன்றாவதாக பிரிட்டனில் இருந்தும் வருகின்றனர்.   நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் முறையே இலங்கை நாட்டவரும் கனடா நாட்டவரும் உள்ளனர்.

மாநிலங்களைப் பொறுத்த வரையில் கடந்த வருடம் தமிழகத்துக்கு அதிக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்   சென்ற வருடம் மட்டும்  60 லட்சத்துக்கு மேற்பட்டோர் தமிழகத்துக்கு வந்துள்ளனர்.  இரண்டாவதாக 50 லட்சம் பயணிகளுடன் மகாராஷ்டிர மாநிலமும் மூன்றாவதாக 37 லட்சம்  பயணிகளுடன் உத்தரப் பிரதேசமும் இடம் பெற்றுள்ளன.