100 பெண்கள், சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த ஜிம்னாஸ்டிக் டாக்டர்!!

வாஷிங்டன்:

கடந்த மாதம் அமெரிக்காவில் மிச்சிகான் மாநில பல்கலைக்கழகத்தில் நீண்ட நாட்களாக பணியாற்றி வரும் ஜிம்னாஸ்டிக் டாக்டர் லாரே நாசர் என்பவர் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். இவர் தொடர்ந்து கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவ பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்களை இவர் பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்துள்ளார்.

கை உறை அணியாமல் அல்லது மசகு எண்ணை என எதுவுமின்றி பெண்களின் உறுப்புக்குள் விரல்களை விடுவது, மார்பகம் மற்றும் பின்புறங்களை தடவுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இந்த விஷயம் தற்போது வெளிச்சத்துக்கு வந்தள்ளது. 9 வயதுக்கும் குறைவான சிறுமிகளிடமும் இவர் பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளார். தற்போது ஒரு பெண் தனது தாயுடன் சிகிச்சைக்கு சென்றிருந்தபோது சேட்டைகளை செய்துள்ளார். இந்த சம்பவம் மூலம் தற்போது டாக்டர் சிக்கினார். இன்னும் பலர் இவர் மீது புகார் அளித்து வருகின்றனர்.

மேலும், பாலியல் சேட்டைகளில் சிக்கும் முதல் விளையாட்டு பிரபலம் நாசர் கிடையாது. இதற்கு முன் கால்பந்து பயிற்சியாளர் ஜெர்ரி சாண்டஸ்கி என்பவர் பல ஆண்டுகளாக சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் எண்ணிக்கை தான் வேறுபாடு. சாண்டஸ்கி 30 சிறுவர்களையும், நாசர் 100 சிறுமிகள் மற்றும் பெண்களையும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

ஜிம்நாஸ்டிக் உலகத்தில் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மத்தியில் நாசரின் செயல்பாடு பெரும் கதையாகி உள்ளது. ஜிம்டெர்நெட் என்ற ஜிம்நாஸ்டிக் இணையதளம் நடத்தி வரும் லாரென் கோப்கின்ஸ் என்பவர் கூறுகையில், ‘‘ இது போன்ற சம்பங்கள் சமூகத்தில் பரவலாக நடக்கத்தான் செய்கிறது’’ என்று ஹஃப்பிங்டன் போஸ்ட் நேர்கானலில் தெரிவித்துள்ளார்.

பிரபல ஜிம்நாஸ்டிக் இதழான ஜிம்காஸ்டிக் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த 5 தொடர்களில் 4 தொடர்கள் பாலியல் வன்முறை குறித்து கட்டுரை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் ஜிம்நாஸ்டிக் உலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல முன்னணி செய்தி நிறுவனங்கள், இதழ்கள், நாளிதழ்கள் செய்தி வெளியட்டுள்ளது.

ஜிம்நாஸ்டிக் மருத்துவரின் லீலைகள் குறித்த செய்திகளை வெளியிட்ட செய்தி நிறுவனங்கள் கால்பந்து பயிற்சியாளர் ஸான்டஸ்கி குறித்த செய்திகளை வெளியிடவில்லை. ‘‘ஜிம்நாஸ்டிக்கும் கால்பந்தும் ஒன்றல்ல. அமெரிக்காவில் எந்த விளையாட்டும் கால்பந்து விளையாட்டோடு ஒப்பிட முடியாது. அமெரிக்கர்கள் மத்தியில் காலபந்து கலாச்சார ரீதியாக ஊடுறுவியுள்ளது. அதனால் கால்பந்து வீரர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை அங்கு யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது’’ என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மகளிர் மீடியா மையம் மேற்கொண்ட ஒரு ஆய்வில் அமெரிக்க இதழியல் துறை 89 சதவீத விளையாட்டு இதழியலாளர்கள் ஆண்களாக உள்ளனர். 10 சதவீத பெண்கள் உதவி இதழியலாளர்களாக தான் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

விளையாட்டு இதழியலாளர் ஜெசிகா லூதர் என்பவர் ஹஃப் போஸ்ட் நேர்கானலில், ‘‘ விளையாட்டு மீடியாக்கள் ஆண் ஆதிக்கம் மிகுந்ததாக உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். இது போல் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அது தொடர்பான நபர்களால் மேற்கொள்ப்படும் பாலியல் ரீதியான குற்றங்கள் வெளியில் தெரியாமல் மூடி மறைக்கப்படுவதோடு பாரபட்சமான முறையில் தான் செய்திகள் வெளியாகிறது என்று பல வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.