7-வது நாளாக நீடிக்கும் லாரி வேலை நிறுத்தம்: திருப்பூரில் 700 கோடி ரூபாய் துணிகள் தேக்கம்

சென்னை:

நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் இன்று 7வது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்த ஸ்டிரைக் காரணமாக திருப்பூரில் மட்டும் சுமார் 700 கோடி ரூபாய் அளவிலான துணிகள் தேக்கம் அடைந்துள்ளது.

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும், சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும்  உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் லாரி உரிமை யாளர்கள் வேலை நிறுத்தம் இன்று 7 வது நாளாக எட்டியுள்ளது.

இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 75 லட்சம் லாரி உரிமையாளர்கள் கலந்துகெண்டு உள்ளனர். . தமிழகத்தில் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை என லாரி உரிமை யாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை விர்ரென்று ஏறி வருகிறது. பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு டீசல் எடுத்துச் செல்லும் லாரிகள் சுமார் 80 சதவீதம் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தத்தால், மத்திய அரசுக்கு 5,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வேலை நிறுத்தம் தங்களுக்கு 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருப்பூரில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகள் தேக்கம் அடைந்துள்ளது.

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 3ஆயிரம் கோடி சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படு கிறது.

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை விண்ணை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.மத்திய அரசு இந்த விஷ யத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.