ராகுல் காந்தி மீது லேசர் குறி பார்ப்பு : பதட்டத்தில் காங்கிரஸ்

மேதி

மேதி தொகுதியில் ராகுல் காந்தி வேட்பாளர் மனு தாக்கல் செய்த போது அவர் மீது லேசர் குண்டுகள் பாய்ச்ச குறி பார்க்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அபாயம் உள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.    தற்போது அவர் தொடர்ந்து மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.   அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதால் அதிக அளவில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

 

இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.   அதன் பிறகு அவர் ஊடகங்களின்  பிரதிநிதிகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.   அந்த நேரத்தில் அவர் தலைமீது ஒரு பச்சை நிற லேசர் அவருடைய தலையில் தெரிந்துள்ளது.   இவ்வாறு எழு முறை  தெரிந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து காங்கிரசார், ”இந்த லேசர் ஒளி  அனேகமாக துப்பாக்கியில் இருந்து குறி பார்க்கப்பட்டதாக இருக்கலாம் என தோன்றுகிறது.   இந்த ஒளி அவருடைய தலையில் அதுவும் நெற்றி பொட்டில் பல முறை காணப்பட்டது.

இது அவருக்கு கொலை மிரட்டலுக்கான அச்சுறுத்தல் என தோன்றுகிறது.

இந்த நிகழ்வின் வீடியோ பதிவு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குக்கு அனுப்பப் பட்டுள்ளது.    இது குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ” என தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் ராகுல் காந்தி செல்ல இருந்த விமானம் காரணமின்றி விபத்துக்குள்ளாக இருந்தது குறிப்பிடத் தக்கது.

Thanx : Twitter