லஷ்கர் இ தொய்பாவை நிராகரித்த பாகிஸ்தான் மக்கள்

ஸ்லாமாபாத்

ற்போதைய பாக் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் லஷ்கர் இ தொய்பா தலைவரான ஹபீஸ் சையத் கட்சி அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவில் உள்ளது.

தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவின் அரசியல் அமைப்பு ஜமாத் உத் தாவா ஆகும்.   இந்த அமைப்பு லஷ்கர் ஈ தொய்பாவின் தலைவரும் மும்பை 26/11 தாக்குதலை நடத்தியவருமான ஹஃபீஸ் சையதால் ஆரம்பிக்கப் பட்டது.  இதற்கு தடை விதிக்கப்பட்டதால் அவர் மில்லி முஸ்லீம் லீக் என்னும் கட்சியை தொடங்கினார்.   இந்தக் கட்சிக்கும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளிக்க மறுத்து விட்டது.

இதை ஒட்டி அவர் அல்லா ஓ அக்பர் தெக்ரிக் என்னும் புதிய கட்சியை தொடங்கினார்.   அந்தக் கட்சியின் சார்பில் தற்போது நடந்த பொதுத் தேர்தலில் 265 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார்.  அவர்களில் ஹஃபிஸ் சையதின் மகன் ஹஃபீஸ் தால்கா சையதும் ஒருவர் ஆவார்.

தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் ஹஃபீஸ் சையத் மற்றும் அவர் மகன் உட்பட அனைவரும் பின்னடைவில் உள்ளனர்.  முடிவு அறிவிக்கப்பட்ட தொகுதிகளிலும் இந்தக் கட்சி படு தோல்வி அடைந்துள்ளது.   பாகிஸ்தான் மக்கள் பயங்கரவாதிகளை முழுமையாக நிராகரித்துள்ளதாக இந்த தோல்வி தெரிவிக்கிறது என பாகிஸ்தான் அரசியல் நோக்கர்கள் கூறி உள்ளனர்.