லக கிரிக்கெட் வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து வரும், இலங்கை வேகப்பந்து வீச்சாளரும், யாக்கர் வீசுவதிலும் வல்லவருமான  லசித் மலிங்கா வரும் ஜூலை 26ம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான் முதல் ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்து உள்ளார்.

உலகக்கோப்பை போட்டித் தொடருடன் மலிங்கா ஓய்வுபெறுவார் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது, வரும் 26ந்தேதி நடைபெறும் ஆட்டத்துடன் ஓய்வு பெறப்போவதாக தெரிவித்து உள்ளார். இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில்,  இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த வர், மலிங்கா. இவர் 7 போட்டிகளில்13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 10 ஓவர் வீசி 43 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.  அதன காரணமாக,  உலக கோப்பை தொடரில் சிறப்பாக பந்துவீசிய பந்து வீச்சாளர்கள் வரிசையில் லசித் மலிங்கா 16வது இடம் பிடித்திருந்தார்.

இந்த நிலையில், தான் ஓய்வு பெறுவது குறித்து மலிங்கா அறிவித்து உள்ளார். வங்கதேச அணி இலங்கையில்  சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அப்போது இரு அணிகளுக்கு இடையே .  மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மூன்று போட்டிகளும் இலங்கையின் பிரேமதாசா ஸ்டேடியத்தில் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளின்போது முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்பதே தனது கடைசி ஆட்டம் என்றும், அதன்பிறகு ஓய்வு பெறுவதாக லசித் மலிங்கா  அறிவித்துள்ளார்.

லசித் மலிங்கா இதுவரை  30 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 101 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். மேலும், 225  ஒருநாள் போட்டிகளில்73 விக்கெட்டுகளும்    டி20 போட்டிகளில் 97 விக்கெட்டுகளும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 3 முறையும், ஒருநாள் போட்டிகளில் 8 முறையும், டி20, ஐபிஎல் போட்டிகளில் ஒரு முறையும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்காக விளையாடிய மலிங்கா மும்பை அணிக்காக அதிக முறை விளையாடி உள்ளார். இதுவரை 122 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை சாய்த்துள்ளதும் அவரது சாதனை.