மாமியார் காலமானதால் இலங்கை விரைகிறார் லசித் மல்லிங்கா

லண்டன்:

மாமியார் காலமானதால் இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர் லசித் மல்லிங்கா அவசரமாக இலங்கை திரும்புகிறார்.


உலகக் கோப்டை கிரிக்கெட் போட்டியில் இதுவரை இலங்கை 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 3 விக்கெட்களை மலிங்கா வீழ்த்தியுள்ளார்.

பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டம் மழையின் காரணமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், மல்லிங்காவின் மாமியார் கொழும்பில் காலமானதையடுத்து, ஜுன் 14-ம் தேதி நடக்கும் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மல்லிங்கா இலங்கை விரைகிறார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தது. அடுத்து ஆப்கானிஸ்தானுடன் ஆடிய ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று பிரிஸ்டலில் பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டம் மழையின் காரணமாக நிறுத்தப்பட்டது.
ஜுன் 15-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் போட்டியில் மல்லிங்கா விளையாடுவார்.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Sri Lanka, மல்லிங்கா
-=-