MOHDMD ALIU LAST PHOTO
தி ஸ்காட்டிஷ் சன் என்ற பத்திரிக்கை முகமது அலியின் இறுதி புகைப்பட ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட அவரது சில புகைப்படங்களை வெளியிட்டது, அது ஒரு சாம்பியன் எப்படி நோயினால் தேய்ந்து கொண்டிருந்தார் என்றும் இருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் வாழ்க்கையில் போராடினார் என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.
MOHD ALI SUN MAGAZINE
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அலி அவர்கள் இறப்பதற்கு முன் பிரிட்டிஷ் புகைப்படக்கலைஞர் செனான் டெக்செரா, சில வாரங்களுக்கு முன்னர் அலியை பார்க்கச் சென்றார். அங்கு அவர் மிகவும் சோர்வான பலவீனமான நோய்வாய்ப்பட்ட ஒரு மனிதனைப் பார்த்தார் ஆனால் இன்னும் அவரது உள்ளங்கையை கடைசி தடவையாய் உயர்த்திக் காட்டினார், பல வருடங்களாக அலியை சாதனை மனிதனாக உயர்த்த உதவிய மிகவும் பரீட்சையமான புன்னகையைச் சிந்தினார். மேலும் புகைப்படங்கள் பார்க்கச் சன் இணையதளத்திற்குச் செல்லவும்.
அலி அவர்களுடன் நடந்த படப்பிடிப்பு பற்றி டெக்செரா, “அவரது சருமம் மின்னியது, அவர் ஒரு அழகான கண்ணாடி அணிந்திருந்தார். அவரை நாற்காலியில் உட்கார உதவும்போது அவர் எவ்வளவு பலவீனமாக இருக்கிறார் எனபது தெளிவாக இருந்தது. அவர் பதில் கூறவில்லையென்றால் கூட அவர் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் புரிந்து கொள்வார் என்று எனக் கூறப்பட்டது. நான் செய்ய வேண்டியதை செய்து, 45 நிமிடங்கள் கழித்து புகைப்படங்கள் எடுப்பதை முடித்துக் கொண்டேன். நான் அவர்து கையைப் பிடித்துக் கொண்டு, நன்றி கூறினேன், அவருக்காகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று நெற்றியில் முத்தமிட்டு விடைபெற்றுக் கொண்டேன்” விவரித்தார்.
 
நன்றி: 1, 2