தமிழகம்: 10 மாதத்தில் 14,077 பேர் சாலை விபத்துகளில் பலி!!

சென்னை:

தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை 14 ஆயிரத்து 77 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘‘ தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை 14 ஆயிரத்து 77 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர். அக்டோபர் வரை 86,873 ஓட்டுநர் உரிமங்களை போக்குவரத்துத்துறை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இரு சக்கரவாகனத்தில் பின்னால் உட்கார்ந்து செல்பவர்கள் ஹெல்மட் அணியாததால் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இரு சக்க்ர வாகன விற்பனை உரிமையாளர்கள் தாமாக முன்வந்து 485 சாலை பாதுகாப்பு மையங்கள் அமைத்தனர். விபத்துகளை தடுக்க சாலை பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட, இந்தாண்டு 5,145 சாலை விபத்துகளும், 525 உயிரிழப்புகளும் குறைந்துள்ளன’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.