Random image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேருக்கு கொரோனா பாதிப்பு, 526 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,551 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், நேற்று ஒரே நாளில்  526 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 35,551 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை தொற்று  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95,34,964-ஆக உயர்ந்துள்ளது. அதுபோல,   24 மணி நேரத்தில்மேலும்  526 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், நாடு முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர்  மொத்த எண்ணிக்கை 1,38,648 -ஆகஅதிகரித்து உள்ளது.

கடநத  24 மணி நேரத்தில் 40,726 பேர் தொற்று பாதிப்பில் இருந்து விடுபட்டு, வீடு திரும்பியதால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 89,73,373 -ஆக உள்ளது.

தற்போது நாடு முழுவதும்  4,22,943 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர் என  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.