புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா…

புதுச்சேரி:

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும்  39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 502 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் நேற்று 59 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,இன்று மேலும்  39 பேர் பாதிக்கப்பட்டுஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து, பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம்அணிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த  நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 39 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.