ஒடிசாவில் கடந்த 48மணி நேரத்தில் ஒருவருக்குக்கூட கொரோனா இல்லை…

புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தில்  கடந்த 48மணி நேரத்தில் ஒருவருக்குக்கூட கொரோனா இல்லை என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்த நிலையில், ஊரடங்கை ஏப்ரல் 30ந்தேதி வரை நீட்டித்து முதன்முதலாக அறிவித்தது ஒடிசா மாநில அரசு. அங்கு மாநில அரசு எடுத்துவரும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளால் நோய்தோற்று கட்டுக்கொள்ளது.

நேற்று முன்தினம் (புதன்கிழமை) 1,197 பேருக்கும், நேற்று (வியாழக்கிழமை) 843 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டத்தில், ஒருவருக்குகூட நோய்த் தோற்று பதிவாகவில்லை என்று, மாநில  சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அங்கு இறுதியாக  ஏப்ரல் 14-ஆம் தேதி 5 பேருக்கு உறுதிசெய்யப்பட்டது.  இதுவரை  7,577 கொரோனா சோதனை செய்யப்பட்டதில்,  7,517 நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியானதாக வும்,  பாதிக்கப்பட்ட 60 பேரில் 19 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

You may have missed