தமிழகத்தில் கடந்த 5 நாளில், ரூ.11 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்! தேர்தல் அதிகாரி

சென்னை: தமிழகத்தில், கடந்த 26ந்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல்  நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில்,  கடந்த 5 நாளில், ரூ.11 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செங்யயப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்து பிப்ரவரி 6ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழக  அரசியல் கட்சிகளும்,  கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையில், தேர்தல் ஆணையமும், வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள், பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பல இடங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு, முறையான அனுமதி மற்றும் ஆவணங்கள் இல்லாத பரிசு பொருட்கள்,  பணம் எடுத்துச்செல்வதை தவிர்த்து வருகிறது.

இந்த நிலையில், இன்று  செய்தியாளர்களை சந்தித்த  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகம் முழுவதும் நேற்று (27ந்தேதி முதல் 3ந்தேதி) வரையிலான கடந்த 5 நாளில்  ரூ.11 கோடி மதிப்பிலான கணக்கில் வராத பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவின்போது,  வாக்காளர்களா மாஸ்க் அணிந்து வந்தால்தான்  வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.