வெளியாகிறது டிம் பெர்லிங் அவிச்சியின் இறுதி படைப்பு….!

சுவீடன் நாட்டைச் சேர்ந்த பாப் இசை, நடனக் கலைஞர் அவிச்சி என அழைக்கப்படும் டிம் பெர்லிங் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ஓமனின் மஸ்கட்டில் தற்கொலை செய்து கொண்டார் . ஆரம்பத்தில் அவரது இறப்பு குறித்து மர்மங்கள் நிலவி வந்த நிலையில் இறுதியில் அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது இறப்பு செய்தியை கேட்டு உலகளவில் உள்ள அவரது ரசிகர்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாகினர்.

அவரது இறப்பிற்கு ஒரு ஆண்டு பின்னர் தற்போது இறுதி படைப்பு வெளியிட அவரது குடும்பத்தார் முன்வந்துள்ளனர்.. அவிச்சி கடைசியாக இசையமைத்த பாடல்களின் தொகுப்பு வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றது!

TIM என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் தொகுப்பு 16 இசை பாடல்களை கொண்டது எனவும், இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை Tim Bergling Foundation-க்கு அளிக்க போவதாக அவரது குடும்பம் முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

உலகின் சிறந்த DJ கலைஞர்களில் ஒருவராக கருதப்படும் அவிச்சியின் படைப்புகளில்… Wake Me Up, Levels, Lonely Together போன்றவை குறிபிட்டத்தக்கவை ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.