டெல்லி:

வரும் ஜூன் 30ம் தேதி-க்குள் ஆதார் பதிவு செய்ய வேண்டும் என்பதை நீட்டிக்க முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சமூக நல திட்டங்களை பெற ஆதார் கட்டாயமாக்கும் திட்டத்துக்கான கெடுவை ஜூன் 30-ம் தேதிக்கு மேல் நீட்டிக்க முடியாது. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி இதை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்‘‘சமூக நலத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்போது தான் அரசின் பலன்கள் தவறானவர்களின் கைகளுக்கு செல்வது தவிர்க்கப்படும். எனவே ஆதார் கட்டாயமாக்கும் திட்டத்துக்கான கெடுவை ஜூன் 30-ம் தேதிக்கு மேல் நீட்டிக்க முடியாது’’ என்றார்.