டில்லி

ருடாந்திர ஜிஎஸ்டி கணக்கு அளிக்கும் கடைசி தேதி நவம்பர் 30 வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்துள்ள வர்த்தகர்கள் ஒவ்வொரு வருடமும் தங்கள் விற்பனை மற்றும் வரிக்கணக்கை அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.  இதற்காக ஜிஎஸ்டிஆர் 9 எம்மி, [டொவ பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த படிவத்தில் வாங்கப்படும்  மற்றும் விற்கப்படும் பொருட்களை அந்தந்த வரித்தலைப்பின் கீழ் பதிய வேண்டும். இதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31 ஆக அறிவிக்கப்பட்டது.

இந்த படிவம் பதிவதில் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டன. இதனால் கடந்த 2017 ஜூலை 1 முதல் 201 மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரையிலான கணக்குகளைப் பதிய இயலாத நிலை ஏற்பட்டது. எனவே ஜிஎஸ்டி யில் பதிவு செய்தோர் பலரும்  தங்களுக்கு வரிக்கணக்கு அளிக்க அறிவிக்கப்பட்டுள்ள கடைசி தேதியை நீட்டிக்கக் கோரிக்கை விடுத்தனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்ற மத்திய நிதி அமைச்சகம் நேற்று ஒரு  அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதன்படி ஜிஎஸ்டி கணக்கு அளிக்கக் கடைசி தேதியை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி தற்போது ஜிஎஸ்டி கணக்கு அளிக்கக் கடைசி தேதி இந்த வருடம் நவம்பர் 30 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.