திருப்பதி பிரமோற்சவம் இறுதி நாள்: விமரிசையாக நடைபெற்ற சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த சில நாட்களாக  கோலாகலமாக  நடைபெற்று வருகிறது. இறுதிநாளான இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி விமரிசையாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் புனித குளத்தில் இறங்கி நீராடினர்.

இன்று அதிகாலை, உற்சவ மூர்த்திகள் மற்றும் சக்கரத்தாழ்வாரின் வீதியுலா நடைபெற்றது. வராக சுவாமி கோயில் எதிரே மலையப்ப சுவாமி மற்றும் சக்கரத்தாழ்வாருக்கும் பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்டவைகளை  கொண்டு திருமஞ்சனம் நடைபெற்றது.

பின்னர் ஏழுமலையான் கோயில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். தொடர்ந்து இன்று மாலை கொடி இறக்க நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த13ந்தேதி முதல் விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினசரி லட்சகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் பெற்று வருகின்றனர். சுவாமி திருவீதி உலாவின் போது,   ஜீயர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடியபடியும்,  பக்தர்கள் பஜனை பாடல்களை பாடியபடி, கோலாட்டம், பரத நாட்டியம் ஆடிக்கொண்டு மாட வீதிகளில் வலம் வந்தனர். மாட வீதிகளில் நடந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு ரசித்தனர். மாட வீதியின் இரு புறத்திலும் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி சுவாமியை தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை, உற்சவ மூர்த்திகள் மற்றும் சக்கரத்தாழ்வாரின் வீதியுலா நடைபெற்றது. வராக சுவாமி கோயில் எதிரே மலையப்ப சுவாமி மற்றும் சக்கரத்தாழ்வாருக்கும் பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்டவைகளை  கொண்டு திருமஞ்சனம் நடைபெற்றது.

பின்னர் ஏழுமலையான் கோயில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். தொடர்ந்து இன்று மாலை கொடி இறக்க நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

இன்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கொடியிறக்கத்தோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.