கடைசிநேர அதகளம் – 191 ரன்களை எட்டிய மும்பை அணி!

ஷார்ஜா: துவக்கத்தில் ரன்கள் சேர்க்க திணறிவந்த மும்பை அணி, 15 ஓவர்களுக்கு மேல் அதிரடி ஆட்டம் ஆடியதால், 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா 45 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 70 ரன்களை விளாசினார். கிரண் பொல்லார்டு 20 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகளுடன் 47 ரன்களை வெளுத்தார்.

மற்றொரு அதிரடி வீரர் ஹர்திக் பாண்ட்யா, 11 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 30 ரன்களை அடித்தார். இதனால், 150 ரன்களுக்குள் முடங்கிவிடும் என்ற எதிர்பார்க்கப்பட்ட மும்பை அணி, 191 ரன்களை எட்டியது.

பஞ்சாப் அணியின் ஜேம்ஸ் நீஷம், 4 ஓவர்கள் வீசி, விக்கெட் எதுவும் எடுக்காமல், அதிகபட்சமாக 52 ரன்களை விட்டுக்கொடுத்தார்.