மக்களவை தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

டில்லி

க்களவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.

நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் கடந்த மாதம் 11 ஆம் தேதி முதல் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யுனியன் பிரதேசத்தில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்த வாக்குப் பதிவில் பீகாரில் 8, ஜார்க்கண்டில் 3, மத்தியப் பிரதேசத்தில் 8, பஞ்சாபில் 13, சண்டீகரில் 1, உத்தரப் பிரதேசத்தில் 13, இமாசல பிரதேசத்தில் 4, மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள் என மொத்தம் 59 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன..

இந்த இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது கடும் பதற்றமான சூழல் நிலவுவதால் இம்மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப் பட்டுளன. சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த கடும் வன்முறையால் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து தொகுதிகளும் பதற்றமான தொகுதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 7 மணிக்கு இந்த 59 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. இன்று தமிழகத்தில் உள்ள அரவக்குறிச்சி, திருபரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.  இதுவரை பதிவான வாக்குகள் வரும் 23 ஆம் தேதி அன்று எண்ணப்பட உள்ளன. அன்றே முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.