ஊடகவியலாளர் ஷாலினிக்கு இறுதிச்சடங்கு: உடலின் மேல் பாரதிதாசன் வரிகள்

திண்டுக்கல் கொடைரோடு அருகே கார் கவிழ்ந்த விபத்தில் பலியன் பெண் செய்தியாளர் ஷாலினியின் இறுதிச்சடங்கு ஈரோட்டில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.

ஷாலினி

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில் வசிக்கும் அங்கையற்கன்னி சென்னையில் உள்ள மாலைமுரசு தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  இவரை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து சக ஊழியர்களான, ஷாலினி, சதீஷ், கோகுல், ராம்குமார், பிரபு ராஜ் ஆகியோர் காரில் பள்ளப்பட்டிக்கு சென்றனர்.  அங்கையற்கன்னியை சந்தித்துவிட்டு அவர்கள் சென்னை திரும்பிய போது பொட்டிகுளம் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில் ஷாலினி உள்ளிட்ட நான்கு பேரும் படுகாயமடைந்தனர். அவர்களில் ஷாலினி மருத்துவமனை செல்லும் வழியிலே மரணமடைந்தார்.

இறுதிச்சடங்கு..

மறைந்த ஷாலினிக்கு அமைச்சர் ஜெயக்குமார் உருக்கமான இரங்கல் தெரிவித்தoர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்ததுடன், ஷாலினி குடும்பத்துக்கு நிதி உதவியும் அறிவித்தார்.

இந்த நிலையில் ஷாலினியின் இறுதிச்சடங்கு அவரது ஈரோட்டு இல்லத்தில் நடந்தது.

தமிழ் மீது மிகவும் பற்றுக்கொண்டவர் ஷாலினி. இதை வெளிப்படுத்தும் விதமாக, அவரது உடல் மீது, “சாவில் தமிழ்ப்படித்துச் சாகவேண்டும்! எந்தன் சாம்பம் தமிழ் மணந்து வேகவேண்டும்” என்ற பாரதிதாசனின் கவிதை வாசகம் வைக்கப்பட்டிருந்தது.

இது காண்போரை மேலும் நெகிழவைத்தது.