தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை: சட்ட மன்றத்தில் அரசு தகவல்

சென்னை:

மிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் கொலை கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.

தமிழக சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பேட்டில், கடந்த 3 ஆண்டுகளில் பதிவான குற்றங்களின் எண்ணிக்கை குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதில், தமிழகத்தில்  2017ம் ஆண்டு 94 ஆதாயக்கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், அதுபோல கூட்டுக்கொள்ளை 97ம், கூட்டுக்கொள்ளையில் ஈடுபட  இருந்த கும்பல்கள் குறிது 134 வழக்கு களும், கொலை முயற்சியாக  2460 வழக்குகளும் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெரும்பாலான குற்ற வழக்குகள், விபத்து தொடர்பான வழக்குகள்  கடந்த 2015, 2016ம் ஆண்டுகளை விட 2017ம் ஆண்டுகளில் அதிகரித்துள்ளது இந்த அறிவிப்பில் தெரிய வந்துள்ளது.

மேலும்,  பாலியல் கொடுமை, மானபங்கம், ஆள் கடத்தல், பெண் கடத்தல், வரதட்சணை கொடுமை போன்ற விவகாரங்களில் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.