டில்லி

த்தரப் பிரதேச மாநிலத்தில் வேலை இன்மை கடந்த வருடம் இருமடங்காகி உள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

நாட்டில் உள்ள பெரிய மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது.   அத்துடன் மக்கள் தொகையிலும் இம்மாநிலம் முதல் இடம் வகித்து வருகிறது.   இந்தியாவின் தற்போதைய நிலை குறித்து இந்தியப் பொருளாதார கட்டுப்பாட்டு மையம் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.  அந்த ஆய்வின் முடிவுகள் ஒரு அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஆய்வறிக்கையில்.”நாட்டில் பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேசத்தில்  நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.  கடந்த 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் அம்மாநிலத்தில் 20 கோடி மக்கள் உள்ளனர்.  இது இந்திய மக்கள் தொகையில் 16%க்கும் அதிகமாகும்.

அதைப் போல் வேலை இன்மையும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வருடா வருடம் அதிகரித்து வருகிறது.   கடந்த 2018 ஆம் வருடம் இம்மாநிலத்தில் வேலை இன்மை 5.91% அதிகரித்துள்ள நிலையில் சென்ற ஆண்டு அது 9.95% ஆகி உள்ளது.  இது கிட்டத்தட்ட இரு மடங்காகும்.    இந்த மாநிலத்தில் 100 பேருக்கு 10 பேர் வேலை இல்லாமல் உள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள வேலை அற்றோர் எண்ணிக்கை 7.7% ஆக உள்ள நிலையில் இது மிகவும் அதிகமாகும்.  உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு அடுத்தபடியாக பீகார் உள்ளது.  வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரிப்பு ஆந்திராவில் மிகவும் குறைவாக உள்ளது.  அடுத்தபடியாக வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரிப்பு  மகாராஷ்டிரா மாநிலத்தில்  குறைவாக உள்ளது.” எனக் காணப்படுகிறது.