தினசரி ரூ.22 கோடி நன்கொடை அளித்த விப்ரோ நிறுவனத்தின் பிரேம்ஜி

டில்லி

டந்த 2020 நிதி ஆண்டில் விப்ரோ நிறுவன அதிபர் அசிம் பிரேம்ஜி மிக அதிக அளவில் அதாவது தினசரி ரூ.22 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

இந்தியாவின் மிகப் பெரிய நன்கொடையாளர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை ஹுருன் இந்தியா மற்றும் எடெல் கிங் அறக்கட்டளை இணைந்து நடத்தி உள்ளது.    இந்த கணக்கெடுப்பின் முடிவில் நன்கொடையாளர்கள் பட்டியலை நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.   இதில் விப்ரோ நிறுவன உரிமையாளர் அசிம் பிரேம்ஜி முதல் இடத்தில் உள்ளார்.

பிரபல ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவன அதிபர் அசிம் பிரேம்ஜி பல சமூக சேவைகளுக்கு நன்கொடை அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.   இவர் கடந்த 2020 நிதி ஆண்டில் மொத்தம் ரூ.7904 கோடி நன்கொடை அளித்துள்ளார்.  அதாவது தினசரி ரூ.22 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

 

சிவ் நாடார்

இரண்டாம் இடத்தில் எச் சி எல் டெக்னாலஜியின் உரிமையாளர் சிவ் நாடார் உள்ளார்.  இவர் ரூ.795 கோடி நன்கொடை அளித்துள்ளார்.   சென்ற ஆண்டு அதிக கொடை அளித்தவராக இருந்த சிவ் நாடார் அப்போது ரூ. 825 கோடி நன்கொடை அளித்துள்ளார்.  அந்த காலகட்டத்தில் அசிம் பிரேம்ஜி ரூ.426 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

முகேஷ் அம்பானி

இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தரும் ரிலையன்ஸ் தலைவருமான முகேஷ் அம்பானி சென்ற ஆண்டில் அவர் ரூ.458 கோடி நன்கொடை அளித்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.  அதற்கு முந்தைய ஆண்டு இவர் ரூ.402 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக நான்காம் இடத்தில் ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, ஐந்தாம் இடத்தில் உள்ளனர்.   ரூ.10 கோடிக்கு மேல் நன்கொடை அளித்தவர்கள் மொத்தம் 78 பேர் உள்ளனர். சென்ற வருடம் இந்த எண்ணிக்கை 72 ஆக இருந்தது.

இதில் முக்கியமானது என்னவென்றால் இவர்களுடைய நன்கொடையில் பெரும்பகுதி பிரதமர் மோடியின் பி எம் கேர்ஸ் ஃபண்டுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகும்.