லடாக்: சீன எல்லையில் பீரங்கி வண்டியை நிறுத்தியது இந்தியா!

லடாக்:

சீனாவின் அத்துமீறல்களை தடுக்க லடாக்கில் இந்தியா 100 ராணுவ பீரங்கி வண்டிகளை எல்லையில் நிறுத்தி உள்ளது.

இந்தியாவின் எல்லை பகுதிகளில் சீனாவும் அடிக்கடி வாலாட்டி வருகிறது. திடீரென நமது எல்லைக்குள் வந்து டென்ட் போட்டு சீன ராணுவ வீரர்கள் அடாவடி செய்வது வழக்கமாக உள்ளது. அதேபோல் காஷ்மிரில் உள்ள லடாக் சிகரத்தின் ஒரு  பகுதியையும், அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.

latak-tank

சீனாவின்  இதுபோன்ற மிரட்டலை சந்திக்க, இந்தியா தயாராகி வருகிறது. லடாக் பகுதியில் இந்தியா ராணுவ துருப்புகளை குவித்து வருகிறது. இந்திய எல்லை அருகே  செல்வதற்கு வசதியாக புதிய சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்திய ராணுவத்தின் அதிநவீன டி.72 ரக   100  பீரங்கி வண்டிகளை லடாக் பகுதியில் ராணுவம் நிறுத்தி வைத்துள்ளது.

இந்த பீரங்கி வண்டிகள்  உறைபனியிலும் இயங்கக்கூடியது. அதை இயக்க செய்யும் வகையில் பிரத்யேகமாக என்ஜின்கள், எரிபொருளும் வடிவமைக்கப் பட்டுள்ளன. இதன் காரணமாக இந்திய எல்லையில் ராணுவ நடமாட்டம் ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.