இளைஞரின் உடம்பில் சுற்றிய பாம்பு!: வைரலாகும்  அதிர்ச்சி வீடியோ!

பாங்காக்:

தாய்லாந்து என்றாலே உல்லாச கேளிக்கைகளுக்கு மட்டுமல்ல பாம்புகளுக்கும் புகழ் பெற்றது. இங்கு பாம்புகளின் நடமாட்டம் அதிகம்.

கடந்த 2014ல் ஒரு சிறுமியின் இடுப்புக்குக் கீழே பாம்பு போல உடல் அமைப்பு இருப்பதாக ஒரு வீடியோ வைரலானது. ஆனால் அது போலி என பிறகு கண்டறியப்பட்டது.

பிறகு கடந்த (2016ம்) ஆண்டு  நவம்பர் மாதம், தாய்லாந்து இளைஞர் ஒருவர், மரணமடைந்த தனது காதலி பாம்பாக மறு பிறவி எடுத்திருப்பதாகக்கூறி பத்தடி நீளமுள்ள நாகப்பாம்பை திருமணம் செய்துகொண்டார். இது குறித்த செய்தியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது இன்னொரு “பாம்பு வீடியோ” சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 8ம் தேதி தாய்லாந்தில் உள்ள ஒரு பிரவுசிங் செண்டரில் ஒரு பாம்பு புகுந்து விட்டது. பதறியபடி, கதவை திறந்து வெளியே செல்ல முயன்ற ஆங் தாங்  என்ற வாலிபரின் உடம்பில் அந்த பாம்பு சுற்றிக்கொண்டது.

அது கூரிய பற்களும் கொடூர விசமும் உள்ள  பாம்பு!

அதிர்ச்சியின் உச்சத்துக்குச் சென்ற அந்த வாலிபர், பாம்பு கடியிலிருந்து தப்பிக்க, உடனடியாக தரையில் விழுந்து புரண்டார். இதில் அந்த பாம்பு அவரது உடலை விட்டு தூக்கியெறியப்பட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டது.
அந்த பிரவுசிங் சென்டரில் இருந்த வேறு சில வாலிபர்களும் பயத்தில்  அங்கும் இங்கும் ஓடினார்கள்.

இந்த காட்சிகள் எல்லாம்  அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்த காட்சியை சுமார் ஒரு நிமிட வீடியோ காட்சியா சமூகவலைதளங்களில் பதிவேற்ற.. தற்போது  அந்த வீடியோ வைரலாகியுள்ளது. இதுவரை

6 மில்லியன் பார்த்திருக்கிறார்கள்.

நீங்களும்தான் அந்த சுவாரஸ்ய காட்சியைப் பாருங்களேன்.