போயஸ்தோட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 11வது நாள் காரியம்!

--

சென்னை,

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 11வது நாள் காரியம் இன்று போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில்  நடைபெறுகிறது.

கடந்த செப்டம்பர் 22ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி கடந்த 5ந்தேதி இரவு மரணத்தை தழுவினார்.

அவர் இறந்து இன்று 11வது நாளாகிறது. அதையடுத்து, அவரது  போயஸ் தோட்ட வீட்டில் 11வது நாளுக்கான காரியம், பூஜை  மற்றும் அஞ்சலி கூட்டம் நடைபெறுவதாக தெரிகிறது.

ஜெயலலிதாவின் 11வது காரியம் நிகழ்ச்சியிம் பங்குகொள்ள தமிழகம் முழுவதும் இருந்து முக்கிய அதிமுக நிர்வாகிகள், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பிக்கள், அதிமுக அவைத்தலைவர் உள்பட நூற்றுக்கணக்கானோர் போயஸ் தோட்டத்திற்கு வந்துள்ளனர்.

தற்போது காரியத்திற்கான சடங்குகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.