மறைந்த திமுக எம்எல்ஏ: ஜெ. அன்பழகன் தொகுதி காலியானதாக அறிவிப்பு

சென்னை:

றைந்த திமுக எம்எல்ஏ: ஜெ. அன்பழகன் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்து உள்ளது.

சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி,  ஜூன் 10-ஆம் தேதி பலியானார்.

இந்த நிலையில் அவரது சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவித்து பேரவைத் தலைவர் தனபால் மற்றும் பேரவைச் செயலர் ஸ்ரீனிவாசன் அறிவிக்கை வெளியிட்டுள்ளனர்.

பொதுவாக ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் அடுத்த 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், இடைத்தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.